மேலும் அறிய

திருடன் வாக்குமூலம் வீடியோ சர்ச்சை: பெண் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை!

அதிகாரக் கட்டுடைப்பு, உலகுடன் நெருங்கி/விலகி செல்ல வேண்டிய தேவை  என ஒரு தத்துவவாதிக்கான அனைத்து குணங்களும் அவரது பேச்சில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது

இருசக்கர வாகனத்தைத் திருடும் போது பிடிபட்ட ராதா கிருஷ்ணன் என்பவர் அளித்த வாக்குமூலத்தை காணொளி எடுத்து வெளியிட்டது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மதனகலா காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றபோது, ராதாகிருஷ்ணன் என்பவர் பிடிபட்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இவருக்கு வயது 31. இந்த திருட்டு சம்பவம் குறித்து, பழனிசெட்டிபட்டி காவல்துறை அதிகாரி மதனகலா விசாரணை மேற்கொண்டார்.  

விசாரணையின் போது, தன்னை அஜித் ரசிகராக அறிமுகப்படுத்திக் கொண்ட இவர், மிகவும் நகைப்புக்குரிய வகையில் பதிலளித்தார். அதே சமயம், இயலாமையை துரிதமாக வெளிபடுத்தும் திறன், வார்த்தை பகட்டுகள், உயர் நிலை நினைவாற்றல், அதிகாரக் கட்டுடைப்பு, உலகுடன் நெருங்கி/விலகி செல்ல வேண்டிய தேவை  என ஒரு தத்துவவாதிக்கான அனைத்து குணங்களும் அவரது பேச்சில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.            

இந்த வீடியோவைக் கண்ட பலர், இதைவிட நகைப்புக்குரியது ஏதும் இல்லை, இதைவிட உண்மையானது ஏதும் இல்லை,இதைவிடப் பயங்கரமானது ஏதும் (Sublime Effect) இல்லை என்று பெருமூச்சு விடத் தொடங்கினர். 

கடந்த சில நாட்களாக, இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானது. கூடவே, பல்வேறு விவாதங்கையும் உருவாக்கியது. குறிப்பாக, அவர் போதை மருந்துக்கு அடிமைபட்டு, மனநல காப்பகத்தில சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்ற அவரது வாக்குமூலம் பேசும் பொருளானது.   

இந்த வீடியோவில் என்ன உள்ளது? என்ன அர்த்தம் தருகிறது?  தனிமனிதனின் இயலாமையை, குற்றவாளியின் மனநல பாதிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுவதா? களங்கம் எற்படுத்துவதா? காவல்துறையின் இத்தகையை செயல் குற்றங்களை இயல்பாக்கி விடாதா? (Normalize) என்ற  கோணத்தில் சிலர் கருத்துக்களை முன்வைத்தனர். காவல்துறையின் இத்தகைய செயல் தலைசுற்றலைத் தருவதாகவும் வேதனை கொண்டனர். 

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, பழனிசெட்டிபட்டி போலீஸ் அதிகாரி மதனகலாவுக்கு மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே நோட்டீஸ் அனுப்பினார். அதிரடி நடவடிக்கையாக, இன்ஸ்பெக்டர் மதனகலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு உத்தரவிட்டார். 

இதனையடுத்து, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் மதனகலா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget