மேலும் அறிய

Online Deed Registration : இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை

Online Deed Registration : பத்திர பதிவு செய்வது பத்திர பதிவு அலுவலகத்திற்கு கட்டாயம் நிலம் விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் கட்டாயம் வர வேண்டும் என்ற நிலையில், தற்போது பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) ஆவணப்பதிவு கட்டாயாமாக்கல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பத்திர பதிவு புதிய திட்டம்

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும். அந்த வகையில் நிலம் வாங்குவதை விட பத்திர பதிவு செய்வது மிகவும் கடினமான நடைமுறைகள் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சொத்தை விற்பனை செய்ய வெளியூரில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பத்திர பதிவு

இது தொடர்பாக பத்திர பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையதளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும். 

ஆன்லைனில் பத்திர பதிவு செய்வது எப்படி.?

ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவிற்கும் அலைபேசிக்கு புலனம் (Whatsapp) மூலமும் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்."வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration)"நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.

அ. சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய
ஆவணங்கள்:
அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)
ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு(First sale of Flat)
இ) தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்
ஈ) வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் இரசீது ஆவணங்கள்

பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள்,வழக்கறிஞர்கள்

1. பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை(இரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள்,எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்யவேண்டும்
3. ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

தொழில்நுட்ப தேவைகள்

1. இணைய இணைப்பு
2. UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி
3. புகைப்படக் கருவி (Webcam)

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
விபரம்
தொடர்பு அலுவலர் பெயர் எண்கள்

வன்பொருள்(Hardware)
முகமது யூனுஸ்,அருண்குமார்
7397574067
9940446694

மென்பொருள்(Software)
திரு.சீனிவாஸ் கணேஸ் திரு.டில்லி பாபு-6369798973 8525805957

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
காங்கிரஸுக்காக கர்நாடகவிடம் மண்டியிடுகிறதா விஜய் அரசு? - காவிரி விவகாரத்தில் கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி
காங்கிரஸுக்காக கர்நாடகவிடம் மண்டியிடுகிறதா விஜய் அரசு? - காவிரி விவகாரத்தில் கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget