Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் பட விவாதம்; குடிசை, எளிய உணவு என சாமியாராய் வாழ்ந்த வினோத்!

ஜனநாயகன் பட விவாதத்தின்போது படத்தின் இயக்குநர் எச்.வினோத் சாமியாராய் வாழ்ந்ததாக இயக்குநர் இரா. சரவணன் தெரிவித்துள்ளார்.
நடிகராய் விஜயின் கடைசித் திரைப்படம் ஜனநாயகன் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ரசிகர்களும் தவெகவினரும் படத்தைத் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்
தங்கள் தலைவன், தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருக்கும் வேளையில், வெளியான படம் என்பதால் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் உடன்பிறப்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் பட விவாதத்தில் கலந்துகொண்டவருமான இரா.சரவணன், ஜனநாயகன் திரை விவாதத்தின்போது நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “வா போகலாம்…” என்றுதான் அழைத்தார். வண்டி வயநாட்டில் போய் நின்றது. வினோத், அவருடைய உதவி இயக்குநர்கள் இருவர், நான் என நான்கே பேர். விஜய் சார் பட கதை விவாதம் என்றார்கள்.
சாமியார் கணக்காகத்தான் வாழ்ந்தார்
பெரிய ஹோட்டலில் ரூம் போட்டுத்தானே கதை விவாதம் நடக்கும்… இவர் ஒரு மலைப்பகுதியின் குடிசை வீட்டுக்குக் கூட்டிப் போனார். எளிய இடம், எளிய உணவு எனக் கிட்டத்தட்ட ஒரு சாமியார் கணக்காகத்தான் வாழ்ந்தார். பேய்த்தனமாகப் பேசி, விவாதித்து முழு நிறைவு வந்த ஒரு நாளில், நிம்மதியாய் பாறைகளின் மேல் படுத்து உறங்கினார் வினோத்.
“வா போகலாம்…” என்றுதான் அழைத்தார். வண்டி வயநாட்டில் போய் நின்றது. வினோத், அவருடைய உதவி இயக்குநர்கள் இருவர், நான் என நான்கே பேர். விஜய் சார் பட கதை விவாதம் என்றார்கள். பெரிய ஹோட்டலில் ரூம் போட்டுத்தானே கதை விவாதம் நடக்கும்… இவர் ஒரு மலைப்பகுதியின் குடிசை வீட்டுக்குக் கூட்டிப்… pic.twitter.com/mBrQz34WoE
— இரா.சரவணன் (@erasaravanan) July 23, 2026
“இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளைவிடச் சிறியவர்கள்…” எனச் சொல்லிச் சொல்லி, எதையுமே தலைக்கு ஏற்றிக்கொள்ளா தன்மையோடு வாழும் தம்பி வினோத் இன்னும் பல உச்சங்கள் எட்டுவார். ‘ஜனநாயகன்’ வெல்லட்டும்; ஜனநாயகம் பூத்துக் குலுங்கட்டும்!’’ என்று இயக்குநர் இரா.சரவணன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























