Nellai Rain: வடியாத வெள்ள நீர்! மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது - ரயில்வே நிர்வாகம்!
மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவத்துள்ளது.
![Nellai Rain: வடியாத வெள்ள நீர்! மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது - ரயில்வே நிர்வாகம்! The railway administration said that the Nellai railway station will not function until further notice Nellai Rain: வடியாத வெள்ள நீர்! மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது - ரயில்வே நிர்வாகம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/54cdd52826d204a258d5b444168dc12b1702986108925572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Nellai Rain: மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவத்துள்ளது.
தென்மாவட்டங்களை புரட்டி போட்ட கனமழை:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டிஅதிக கனமழை பெய்தது. கிட்டதட்ட இரு மாவட்டங்களிலும் ஒரே நாளில் 660 செ.மீ., மழை பெய்ததால் அனைத்து இடங்களையும் வெள்ளம் சூழந்தது.
உடனடியாக தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணியில் தீவிரமாக களமிறங்கியது. தன்னார்வலர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையை பொறுத்தவரை தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள சந்திப்பு, கொக்கிரக்குளம், கோபால சமுத்திரம், சேரன்மகாதேவி,அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் பாளையம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் வடக்கு பைபாஸ் சாலைகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.
மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது:
நெல்லை, தூத்துக்குடியில் மழையின் அளவு குறைய தொடங்கியுள்ளது. முழுவதுமாக இல்லாவிட்டாலும் பெரிய அளவில் மழை இல்லாத நிலையில் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள வடிநீர் வடியத் தொடங்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. வெள்ளம் சூழந்த பகுதியில் பைபர் படகு செல்ல முடியாத நிலையில் ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் பணியும், உணவுப் பொருட்கள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
Restoration works are in full swing at Tirunelveli railway station
— Southern Railway (@GMSRailway) December 19, 2023
Rain water is being pumped out of the station - glimpses! #SouthTNRain #SouthernRailway pic.twitter.com/0zWuauCCYK
சில இடங்களில் மழைநீர் வடியாததால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நெல்லை ரயில் நிலையத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், நெல்லை ரயில் நிலையத்தில் தேங்கி உள்ள மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவத்துள்ளது.
மேலும் படிக்க
அயோத்தி கோயில் திறப்பு விழா! "நீங்க வந்துராதீங்க" அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு இந்த கதியா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)