தீவிரமடையும் விசாரணை: தனியார் பள்ளி முதல்வர் இன்றும் ஆஜராக போலீஸ் சம்மன்

ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் வழக்கு தொடர்பாக, தனியார் பள்ளி முதல்வரை இன்றும் ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் வழக்கில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் இன்றும் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளார்.

சென்னை கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  புகாரளித்தும் ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அசோக் நகர் மகளிர் போலீசார், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பினர். இதனைத்தொடர்ந்து, நேற்று பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலாவிடம் மூன்று மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தனியார் பள்ளி முதல்வரை இன்றும் ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் காலை 11 மணிக்கு கீதா கோவிந்தராஜன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 354 ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ராஜகோபாலன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிபதி அப்துல் பரூக், ராஜகோபாலனை ஜூன் 8ஆம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தீவிரமடையும் விசாரணை: தனியார் பள்ளி முதல்வர் இன்றும் ஆஜராக போலீஸ் சம்மன்

முன்னதாக, இந்தப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரியும், ராஜகோபாலன் மீது பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பியதும், மாணவிகளுடனான ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணத்தில் மாணவிகளுக்கு அவர் பாடம் எடுத்ததையும் ஆதாரத்துடன் அவர் பகிர்ந்திருந்தார். மேலும், அவர் மாணவிகளை இரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்துவதும், திரைப்படங்களுக்கு செல்ல அழைப்பதும் என்று மாணவிகளுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது. முன்னாள் மாணவியின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த புகார் தொடர்பாக உடனே விசாரிக்க வேண்டும் என்றும், ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

விசாரணையில், அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதும், அவர்களுக்கு ஆபாச படங்களின் இணைப்புகளை வகுப்பு குழுவிலே பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் இந்த பள்ளியில் தன்னைப் போன்றே மேலும் சில ஆசிரியர்கள் உள்ளதாகவும். அவர்களும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rajagopalan pocso act chennai kk nagar private school Sexual Harrassment case ashok nagar women police school head master

தொடர்புடைய செய்திகள்

திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

TamilNadu Admissions: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

TamilNadu Admissions: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Women as Priests : இனி பெண்கள் விரும்பினால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு..!

Women as Priests : இனி பெண்கள் விரும்பினால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும்  - அமைச்சர் சேகர் பாபு..!

TamilNadu Corona Vaccination : இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

TamilNadu Corona Vaccination : இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

டாப் நியூஸ்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!