TN Weather Update: ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்! டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - என்ன நிலவரம்?
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![TN Weather Update: ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்! டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - என்ன நிலவரம்? The Meteorological Department has said that there may be moderate rain in the delta districts of Tamil Nadu april 1 and 2 TN Weather Update: ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்! டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - என்ன நிலவரம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/01/3520bc46cd1123c9ae2e609fb660830d1711958191732589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை:
அதன்படி இன்று, (ஏப்ரல் 1) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல் நாளை (ஏப்ரல் 2) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் திருச்சி மாவட்டத்தில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 34.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நீடாமங்கலம் (திருவாரூர்) 2, நாகுடி (புதுக்கோட்டை), கமுதி (ராமநாதபுரம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)