மேலும் அறிய

ரூ.1000 கோடி மதிப்பிலான தோட்டக்கலை நிலத்தை கையகப்படுத்த தடையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

ஆயிரம் கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதிட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி 'தோட்டக்கலைச் சங்கம்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார். இதை மீட்க கடந்த 1989ஆம் ஆண்டே அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என  உறுதி செய்தது. பின்னர், அங்கு அமைந்திருந்த டிரைவ் இன் உணவு விடுதி அனுபவித்த 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழி பூங்கா அமைத்தது. 

அந்த நிலத்திற்கு எதிரில் 6.36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு  உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சென்னை மாவட்ட ஆட்சியர், அந்த நிலம் சங்கத்திற்கே சொந்தமானது  உத்தரவிட்டிருந்தார்.  ஆனால் நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், தானாக முன்வந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறுத்திவைத்து, ஏன் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என தோட்டக்கலை சங்கத்திற்கு  நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

இந்த நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அரசு நிலத்திற்கு உரிமை கோரிய தோட்டக்கலை சங்கத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை  நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget