மேலும் அறிய

RS Bharathi Petition: டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ் பாரதி மனு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி..

ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக்கோரிய ஆர்.எஸ் பாரதி மனு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக்கோரிய ஆர்.எஸ் பாரதி மனு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஆரம்பக்கட்ட விசாரணையில் குறைபாடு காணமுடியாது என்றும் ஆட்சி மாற்றம் காரணமாக விசாரணை தேவையில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. எடப்பாட்டி பழனிசாமி தொட்ரந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஏற்காததால், மீண்டும் விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக தனது வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

எட்பபாடி பழனிசாமி தரப்பில் 2018ல் தாக்கல் செய்யப்பட்ட அரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றும், பாரதி வழக்கை திரும்பப்பெற அனுமதிக்க கூடாது என்றும் வாதிட்பபட்டது. மறுவிசாரணைக்கு ஒப்புதல் அளிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. பின்னர் நீதிபதி, 2018ல் நடந்தப்பட்டு நீதிமன்றத்தில் மூடிமுத்திரையிட்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆராய்வதாகவும், அதன் அடிப்படையில் வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு உத்தரவுக்காக பட்டியலிடப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆரம்பக்கட்ட விசாரணையில் குறைபாடு காணமுடியாது என்றும் ஆட்சி மாற்றம் காரணமாக விசாரணை தேவையில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Embed widget