மேலும் அறிய

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கா..? ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி சொன்னது இதுதான்!

ஜெயலலிதா மரண விசாரணையில் ஆணையம் தாமதம் செய்யவில்லை என ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது முழு அறிக்கையை அரசிடம் இன்று தாக்கல் செய்தது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழ்நாடு முதல்வர் அவர்களும், தமிழ்நாடு அரசும் இந்த ஆணையத்தை தொடரலாம் என்று சொன்னதுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். முதலில் ஆறுமுகசாமி ஆணையம் நீதிமன்றம் போல் செயல்பட்டதாக உச்சநீதிமன்றம் கூறியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா உடல்நிலை எப்படி இருந்தது என்பதில் தொடங்கி விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரண விசாரணையில் ஆணையம் தாமதம் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆறுமுகசாமி, மொத்த விசாரணையுமே அது தொடர்பானதுதான். அந்த அறிக்கையைத்தான் தற்போது அரசிடம் அளித்துள்ளோம். அறிக்கையை வெளியிடலாமா என்பதை அரசுதான்முடிவு செய்யும். ஆங்கிலத்தில் 500 பக்கமும், தமிழில் 608 பக்கமும் தாக்கல் செய்யப்பட்டது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

தொடர்ந்து, ”ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவந்த விதத்தில் சந்தேகதன்மையான எதுவும் இல்லை. அதனால் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்யவில்லை. அதேபோல், சசிகலா நேரில் வர தயாராகயில்லை என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை நேரில் அழைக்கவில்லை “ என்றார். 

எய்ம்ஸ் அறிக்கை : 

ஜெயலலிதா சிகிச்சையை நேரில் பார்வையிட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு இதுவரை 6 அறிக்கைகளை அளித்துள்ளது. அதனையும் ஜெயலலிதா இறந்து 3 மாதங்களுக்கு பிறகே முதல் அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை அளித்தது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

அறிக்கை தாக்கல் : 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (27.08.2022) தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.ஆறுமுகசாமி அவர்கள் சந்தித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கடந்த 5.12.2016 அன்று காலமானது குறித்து விசாரிப்பதற்காக கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 25.09.2017 அன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ. ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இவ்விசாரணை ஆணையத்தின் கால வரம்பு 24.08.2022 அன்று முடிவுற்ற நிலையில், இன்று (27.08.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ. ஆறுமுகசாமி அவர்கள் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார். இந்த அறிக்கையை 29.08.2022 அன்று நடைபெற இருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting) ஒரு பொருண்மையாக வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் முனைவர் திரு. எஸ்.இரகுபதி மற்றும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget