மேலும் அறிய

" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்

70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து , பேரனையும் அடித்துக் கொலை செய்த வழக்கில் 19 வயது இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதிப்பு

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்

கடந்த 2022 - ம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நாளன்று இரவு சுமார் 11 மணியளவில் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியது.  அடவிநயினார் கோவில் அணைக்கு செல்லும் சாலையில் உள்ள வீட்டில் அப்துல்கனியின் மனைவி , 70 வயதான சைத்தான் பீவி தனியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த முகம்மது காசிம் ( வயது 19 ) என்ற நபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலின் போது சைத்தான் பீவி உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

யார் அது ? சத்தம் போட்ட பேரன்

மூதாட்டி உயிரிழந்த பிறகு, அவரது உடலை நிர்வாண நிலையில் வீட்டிலிருந்து வெளியே தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த அவரது பேரன் காஜீர் அலி , இருட்டில் என்ன நடக்கிறது என்று புரியாமல் "யார் அது ? " என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குற்றவாளி, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து காஜீர் அலியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இரட்டை கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் , அச்சன்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று , இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மேக்கரை கிராமம் வண்ணாத்திப்பாறை சாலை பகுதியைச் சேர்ந்த முகம்மதுகனியின் மகன் முகம்மது காசிம் ( வயது 19 ) என்பவரே இந்த இரட்டை கொலை வழக்கின் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.

இரட்டை ஆயுள் தண்டனை

அவரை கைது செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் அனைத்து சாட்சிகள், மருத்துவ ஆதாரங்கள் மற்றும் புலனாய்வு ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், முகம்மது காசிம் மீதான குற்றச் சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டதாக கூறி தீர்ப்பளித்தது.

இதையடுத்து 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்கும், அவரது பேரன் காஜீர் அலியை கொலை செய்ததற்கும் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு உத்தர விட்டார்

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget