‛4 மாதத்தில் டாஸ்மாக் வருவாய் ரூ.7,907 கோடி குறைந்தது’ - தமிழ்நாடு அரசு தகவல்!
2019- 20ஆம் ஆண்டில் ரூ.33,133 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.33.811 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு மாதங்களில் டாஸ்மாக் வருவாய் ரூ.7,907 கோடியாக குறைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் முதல் ஜூலை வரை டாஸ்மாக் வருவாய் ரூ.7,907 கோடியாக குறைந்துள்ளதாகவும், கொரோனா தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடிப்பட்டிருந்ததால் வருவாய் குறைந்துள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தகவல் தெரிவித்துள்ளது. 2019- 20ஆம் ஆண்டில் ரூ.33,133 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.33.811 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கிற்கு பிறகு கடந்த ஜூன் மாதம் (கோவையை தவிர்த்து) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் திறக்கப்பட்ட ஒரே நாளில், ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை ஆனது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், சென்னையில் ரூ.42.96 கோடிக்கும், சேலத்தில் ரூ.38.72 கோடிக்கும் , திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும் மது விற்பனை ஆகி, ஒரே நாளில் நூறு கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கடைகள், சில தினங்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டு மதுவிற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தற்போது மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் எண்ணம் அரசிடம் இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அந்த துறையைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் எண்ணம் அரசிடம் இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.15 கோடி செலவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று டாஸ்மாக் அறிவித்தது. இந்த விலை உயர்வு கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
TASMAC | திறந்த பலனை அடைந்தது டாஸ்மாக்... ஒரே நாளில் ரூ.164 கோடியை தாண்டிய விற்பனை!