மேலும் அறிய

Tasmac: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்

டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம். இதன் மூலம் கூடுதல் பணம் வசூலிப்பது தடைசெய்யப்படும்.

கோடிகளை கொட்டும் டாஸ்மாக்

நவீன காலத்தில் மது குடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பல நூறு கோடி ரூபாய் வருவாய் தினந்தோறும் குவிந்து வருகிறது.எனவே தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பெரிதும் உதவும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் உள்ளது. அதிலும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்றால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 200 கோடி ரூபாயை வருவாய் தாண்டும். 2024-2025ம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 

பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல்

இருந்த போதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பிரியர்களிடம் இருந்து ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் அதற்கு முடிவே கிடைக்காமல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட், இடமாற்றம், கடும் கட்டுப்பாடுகள் என விதித்தாலும் 10 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி மதுபான விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்டவைகளை கண்டறியமுடியும்.

டாஸ்மாக் டிஜிட்டல் முறை அமல்

அந்த வகையில் ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து எம்.ஆர்.பி விலையிலேயே மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான ஆய்வானது நடைபெற்று வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே பணம் செலுத்தும் வகையில் டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும்.எனவே பாட்டிலுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க முடியாத நிலை ஏற்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டைனமிக் க்யூஆர் கோடு அறிமுகம்

முதல் கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள 2 கடைகள் உள்பட மாநிலத்தின் 5 மண்டலங்களிலும் உள்ள இரண்டு கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்களுடன் ஸ்கேனர்களை இணைக்கும் சோதனையானது தற்போது நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக  சென்னையில் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 70 டாஸ்மாக் கடைகளிலும், அடுத்த ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் டைனமிக் க்யூஆர் கோடுகளை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மதுபிரியர்களிடம் இருந்து கூடுதலாக பணம் வசூலிப்பது தடுக்கவாய்ப்பு உருவாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

விஜய் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு வீடியோ...இருமாநில முதல்வர்கள் பேசியது என்ன? யார்? யார்? இருந்தார்கள்?
விஜய் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு வீடியோ...இருமாநில முதல்வர்கள் பேசியது என்ன? யார்? யார்? இருந்தார்கள்?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
தமிழ்நாடு சீரழிகிறது... விஜயவாடா சுத்துறதுதான் விஜய்க்கு வேலையா? - ஸ்டாலின் அதிரடி அட்டாக்
தமிழ்நாடு சீரழிகிறது... விஜயவாடா சுத்துறதுதான் விஜய்க்கு வேலையா? - ஸ்டாலின் அதிரடி அட்டாக்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget