இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்கள்:
நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
PSLV-C59 Rocket: நேற்று கோளாறு: இன்று சீறிப் பாய்ந்த இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட்.! இது எதற்காக?
தமிழ்நாட்டின் வானிலை நிலவரம்:
தென்கிழக்கு 'அரபிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , அடுத்த 7 நாட்களுக்கு , தமிழ்நாட்டில் வானிலை குறித்து தெரிந்து கொள்வோம்.
05-12-2024 மற்றும் 06-12-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
07-12-2024 முதல் 10-12-2024 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-12-2024:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை' பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.