மேலும் அறிய

வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்த விவகாரம்.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையில் 4 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி 11 ஆயிரம் என்ற அளவை நெருங்கிவருகிறது. தமிழகத்திலும் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவு என்ற தனி வார்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்த விவகாரம்.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் கொரோனா வார்டு தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி என்ற பெண், செல்வராஜ், சிராஜ் உள்பட 4 பேர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

ஒரேநாளில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 நபர்கள் அடுத்தடுத்த உயிரிழந்ததற்கு, மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதே காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினார். மேலும், அவர்கள் 4 பேரும் உயிரிழந்த பிறகே மருத்துவமனையில் அவசரம் அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாற்றப்பட்டதாகவும் கூறினர். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்த உயிரிழப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்த விவகாரம்.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

இந்த நிலையில், 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். இருப்பினும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நோட்டீஸ் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில், ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாகவே 4 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தியின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Embed widget