நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : தர்மபுரி 80.49 சதவீதம்...! சென்னை 43.59 சதவீத வாக்குகள்...! தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீத வாக்குள்...? முழு விவரம்..!
தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட வாரியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அவற்றில் பேரூராட்சிகள் 74.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நகராட்சி பகுதிகளில் 68.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பேரூராட்சியில் 80.14 சதவீத வாக்குகளும், நகராட்சியில் 81.37 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட வாரியாக வாக்குகள் வீதம் பின்வருமாறு :
1.அரியலூர் – 75.69 சதவீதம்
2.செங்கல்பட்டு – 55.30 சதவீதம்
3.சென்னை – 43.59 சதவீதம்
4. கோவை – 59.61 சதவீதம்
5.கடலூர் – 71.53 சதவீதம்
6. தர்மபுரி – 80.49 சதவீதம்
7.திண்டுக்கல் – 70.65 சதவீதம்
8. ஈரோடு – 70.73 சதவீதம்
9. கள்ளக்குறிச்சி – 74.36 சதவீதம்
10. காஞ்சிபுரம் – 66.82 சதவீதம்
11. கன்னியாகுமரி – 65.72 சதவீதம்
12. கரூர் – 76.34 சதவீதம்
13. கிருஷ்ணகிரி – 68.52 சதவீதம்
14.மதுரை – 57.09 சதவீதம்
15.மயிலாடுதுறை – 65.77 சதவீதம்
16.நாகப்பட்டினம் – 69.19 சதவீதம்
17.நாமக்கல் – 76.86 சதவீதம்
18.பெரம்பலூர் – 69.11 சதவீதம்
19. புதுக்கோட்டை – 69.61 சதவீதம்
20. ராமநாதபுரம் – 68.03 சதவீதம்
21. ராணிப்பேட்டை – 72.24 சதவீதம்
22. சேலம் – 70.54 சதவீதம்
23. சிவகங்கை – 67.19 சதவீதம்
24. தென்காசி – 70.40 சதவீதம்
25. தஞ்சை – 66.12 சதவீதம்
26.தேனி – 68.94 சதவீதம்
27. நீலகிரி – 62.68 சதவீதம்
28. தூத்துக்குடி – 63.81 சதவீதம்
29. திருச்சி – 61.36 சதவீதம்
30.திருநெல்வேலி – 59.65 சதவீதம்
31. திருப்பத்தூர் – 68.56 சதவீதம்
32. திருவள்ளூர் – 65.61 சதவீதம்
33.திருவண்ணாமலை – 73.46 சதவீதம்
34.திருவாரூர் – 66.25 சதவீதம்
35. வேலூர் – 66.68 சதவீதம்
36. விழுப்புரம் – 72.39 சதவீதம்
37.விருதுநகர் 69.24 சதவீதம்
38.திருப்பூர் – 60.66 சதவீதம்