TN Rain: அடுத்த ஏழு நாட்களுக்கு மழை இருக்கா? தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் என்ன?
TamilNadu Rain Updates: சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வானிலை நிலவரம் எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்கிழக்கு 'அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , அடுத்த 7 நாட்களுக்கு , தமிழ்நாட்டில் வானிலை குறித்து தெரிந்து கொள்வோம்.
05-12-2024 மற்றும் 06-12-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
07-12-2024 முதல் 10-12-2024 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-12-2024:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை' பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, வேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை pic.twitter.com/rJOdSwgptW
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 5, 2024