TN Rain: நாளைக்கு கனமழை இல்லை: ஆனால் 2 நாட்களுக்கு பிறகு, இந்த மாவட்டங்களில் வெளுக்கப் போகுது.!
Tamilnadu Rain Updates : அடுத்த 48 மணி நேரத்தில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி , தமிழ்நாட்டை நெருங்கும் நிலையில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு எந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என பார்ப்போம்.
13:12:2024 :
தென் தமிழகத்தில் அநேக இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் தேனி, மதுரை, விருதுநகர் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்தூரில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
14.12.2024:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
15.12.2004:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-12-2034:
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமார்தபரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கிருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவை -காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
17-12-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருவாரூர். பெரம்பலூர் கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18-12-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவை பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19-12-2224: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read: TN Rain: வெளுத்து வாங்கிய மழை: 32 சதவிகிதம் அதிகம் - வானிலை மைய இயக்குநர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, வேசான மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
13-12-2024: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி:
நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி தோத்தில் மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
நாளை (14-12-2024 )
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.