TN Headlines: நெருங்கும் புயல்; அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் கனமழை - முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- அமலாக்கத்துறை அதிகாரி கைது; FIR-ல் இருப்பது என்ன? - வெளியான திடுக்கிடும் தகவல்
-
TN Rain Alert: நெருங்கும் புயல்! சென்னைக்கு செம்ம மழை - பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும்?
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று, புதுச்சேரிக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே 510 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தெற்கு -தென்கிழக்கே 710 கி.மீ. மையம் கொண்டுள்ளது. மேலும் படிக்க
- Annamalai: "ஒரு மனிதன் செய்த தவறு; துறையையே தவறாக சொல்லக் கூடாது" - அமலாக்கத்துறை குறித்து அண்ணாமலை
அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதாகியுள்ள நிலையில், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டது தொடர்பாக பேசிய அவர், ”ஒரு மனிதன் தவறுசெய்ததற்கு ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு என்று சொல்லிவிட முடியாது. மேலும் படிக்க
- மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி பாஜக தலைவர் அண்னணாமலை தான் - சிவி சண்முகம்
- HBD Veeramani: தி.க.தலைவர் வீரமணியின் 91வது பிறந்தநாள்.. வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்..!
திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெரியாரால் 1962ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தில் தலைவராக நியமிக்கப்பட்டவர் கி.வீரமணி.தற்போது உள்ள வயது மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். அவர் இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள கி.வீரமணி இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் படிக்க