TN Headlines: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; தொடர் சிகிச்சையில் விஜயகாந்த் - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.
- TN Rain Alert: சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்.. எந்த தேதிகளில்? மழை அப்டேட் இதோ..
டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில், ”அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (28-11-2023) காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் புயலாக வலுப்பெறக்கூடும். மேலும் படிக்க
- Vijayakanth: ‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; இன்னும் 14 நாட்கள் தேவை’ .. மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேமுதிக தலைவரான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் பெரிய அளவில் வெளியில் தலைக்காட்டுவது இல்லை. அவ்வப்போது தேமுதிக அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். கம்பீரமான மனிதராக வலம் வந்த விஜயகாந்தின் தற்போதைய நிலையில் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. மேலும் படிக்க
- EPS Pressmeet: ”டெல்டாகாரன் என்று வீர வசனம் பேசினால் மட்டும் போதாது” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..
பொங்கல் பரிசை திமுக அரசு முறைகேடு இல்லாமல் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், , ‘ அமைச்சர் சிவசங்கர் பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் விளக்கம் கேட்கின்றார், அதிலும் ஜாதி குறிப்பிட்டு கேட்கின்றார். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என வாக்குறுதி தரப்பட்டது ஆனால் தற்போது அப்படி நடக்கவில்லை. மேலும் படிக்க
- Chief Minister M. K. Stalin: 17 நாட்களுக்கு பிறகு 41 துணிச்சல்மிக்க தொழிலாளர்களை மீட்டதில் நிம்மதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
17 நாட்களுக்கு பிறகு 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது. மீட்பு பணிகளில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் படிக்க
- IT ED RAID: சென்னையில் அதிரடி - ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், புரசைவாக்கம் பகுதியில் உள்ளபிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் வசிக்கும், அரசு ஒப்பந்தங்களுக்கு மின் சாதனங்களை விநியோகிக்கும் ஒப்பந்ததாரர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க