TN Headlines: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள் - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.
- TN Rain Alert: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. எங்கெங்கு தெரியுமா?
நாளை (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- Karthigai Deepam 2023: கார்த்திகை தீபத் திருவிழா.. பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி மலைக் கோயிலுக்கு சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. மேலும் படிக்க
- Karthigai Deepam 2023: 'தென் திருவண்ணாமலை'.. திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் இன்று மகாதீபம்..!
திருகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் கோவிலின் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரை-யை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம் ஆகும். கடந்த அக்டோபர் 29-ந் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் ஆகும். மேலும் படிக்க
- Annamalai: அரசின் எல்லா மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க தேவையில்லை - அண்ணாமலை பேட்டி
தி.மு.க., கட்சியில் கோழைகள் மட்டுமே உள்ளனர். பிரதமர் குறித்த டிவீட்டை அழித்து விட்டு ஓடியவர் மனோ தங்கராஜ். தமிழ்நாட்டு அரசியலில் அடிப்படையில் ஒரு நாகரீகம் தேவை. தி.மு.கவினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். காமராஜரை அவதூறு மூலம் தான் தோற்கடித்தனர். ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10-12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. மேலும் படிக்க
- Karthigai Deepam: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. அவசர எண்களை அறிவித்த காவல்துறை..
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான மகா தீப திருவிழா இன்று நடைபெறூகிறது. கார்த்திகை தீப விழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் படிக்க