மேலும் அறிய

Karthigai Deepam: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. அவசர எண்களை அறிவித்த காவல்துறை..

கார்த்திகை தீப திருநாளை ஒட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் காவல்துறை தரப்பில் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான மகா தீப திருவிழா இன்று நடைபெறூகிறது. கார்த்திகை தீப விழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. நவம்பர் 23  தேரோட்டம் நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

 இன்று அதிகாலை 3.40 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள  2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீப நிகழ்வு முடிந்தவுடன் இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447703, 044-28447701, 8939686742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குழந்தைகள் காணாமல்போவது தொடர்பாக 9342116232, 8438208003 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை ஒட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் மக்கள் கிரிவலப்பாதைக்கு சென்று திரும்ப வசதியாக 40 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிற்றுந்துகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எந்த வித அசௌகரியமும் ஏறபடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம் மகா தீபம் காண மலையேறும் பக்தர்களுக்கு  பல நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இதற்கான இன்று அதிகாலை முதல் திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்படும். அங்கு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசைப்படி (Queue System) புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Embed widget