மேலும் அறிய
Tamilnadu Roundup: ஸ்டாலின் வேண்டுகோள், சுங்கட்டணம் உயர்வு அமல், புதிய டிஜிபி - 10 மணி செய்திகள்
Tamilnadu Headlines(01.09.25): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை தற்போது தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- "சின்னதா பிஸ்னஸ் செய்தாலும், உங்க தொழிலை தமிழ்நாட்டிலும் தொடங்குங்க.." ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
- சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதிக்கப்படாத வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் உள்பட 53 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்
- தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல். அதிகபட்சமாக ரூ.395 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி.
- அன்புமணி ராமதாஸ் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை பாயுமா? ராமதாஸ் தலைமையில் இன்று கூடுகிறது, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்.
- தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பதவியேற்பு. பொறுப்புகளை முறைப்படி ஒப்படைத்தார் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால்.
- தமிழ்நாடு முழுவதும் விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. குறைந்தபட்சம் ரூ.5-ல் இருந்து அதிகபட்சம் ரூ.395 வரை - சுங்கக் கட்டணம் உயர்வு. வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு.
- ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் சிலைகளை அப்படியே விட்டுச் சென்றதால் வருவாய்த்துறையினர் மீட்டு எடுத்துச் சென்றனர்
- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 31,854 கன அடியாக அதிகரித்துள்ளது அணையின் நீர் மட்டம் 119.23 அடியாக உயர்ந்து நீர் இருப்பு 92.248 டி.எம்.சி. ஆக உள்ளது
- திருச்சி சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்து. ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
காரில் பயணித்த குழந்தை அனோனியா, யசோதா, விஜயபாபு ஆகியோர் பலி. கார் ஓட்டுநர் ஜோசப், செல்வக்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்பு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
அரசியல்





















