மேலும் அறிய
Tamilnadu Roundup: SIR - SC-ல் திமுக இன்று மனு தாக்கல், விஜய்யிடம் இன்று சிபிஐ விசாரணை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கக் போரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்கிறது திமுக. நேற்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று நடவடிக்கை.
- SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சிபிஐ அதிகாரிகள் இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்.
- “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ திட்டம் குறித்த அன்புமணி புகாருக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு. திட்டம் வாயிலாக நன்கொடை வசூலிக்க அதிகாரிகள், ஆசிரியர்கள் வற்புறுத்தல் என்பது ஆதாரமற்ற புகார் என விளக்கம்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,800-க்கும், கிராமிற்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,350-க்கும் விற்பனை.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை போலீசார் விசாரணை.
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய வீராங்கனைக்கு பரிசுக் கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு.
- பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்ட பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. டிசம்பர் 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை. தப்பியோடிய 3 இளைஞர்களை தேடும் காவல்துறையினர்.
- தூத்துக்குடி மீள விட்டான் ரயில் நிலையத்தில் ரயிலின் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு. மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















