மேலும் அறிய
Tamilnadu Roundup: 'SIR'-அனைத்து கட்சிக் கூட்டம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது, மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- ‘SIR‘ எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், தமிழ்நாட்டில் வரும் 4-ம் தேதி தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
- நாடு முழுவதும் தங்களுக்கு பாதகமான வாக்குகளை நீக்கம் பணியில் பாஜக வெளிப்படையாக ஈடுபட்டு வருவதாக ‘SIR‘-ஐ சுட்டிக்காட்சி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.
- ‘SIR‘ நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்காது என தகவல். அரசு சார்பாக அல்லாமல், திமுக சார்பாக கூட்டப்பட்டுள்ளதால் புறக்கணிப்பு என தவெக விளக்கம்.
- பாஜக வாக்காளர்களை தமிழகத்தில் குடியேற்றவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு.
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்.
- கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி துப்பாக்கி முனையில் விரட்டியடித்ததால், நடுக்கடலில் பரபரப்பு.
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை 1 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்ப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்.
- அரக்கோணத்தில் ஸ்ப்ளென்டர் பைக்குகளை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த வேலூரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 9 ஸ்ப்ளென்டர் பைக்குகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை.
- தஞ்சாவூரில், பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறத்தி, இடைவிடாது 2 மணி நேரம் ஒரே கையில் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை.
- சேலத்தில், பாகல்பட்டி ஆதிசிவன் ஸ்ரீசோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் ஏந்தி முளைப்பாரி எடுத்து வழிபாடு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement





















