TN Headlines: அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து; குகேஷை நேரில் வாழ்த்திய முதலமைச்சர் - இதுவரை இன்று
3PM Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
Gukesh Chess: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷூக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத் தொகை - நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!
உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு தமிழ்நாடு சார்பில் ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையா வழங்கப்பட்டது. மேலும் படிக்க..
TN Weather Update: வெயிலின் உக்ரம்.. 13 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எங்கெல்லாம் வெப்ப அலை இருக்கும்?
Tamilnadu Heat wave : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மே 1 ஆம் வரை, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.மேலும் படிக்க...
Mettur Dam: தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து.. இன்றைய நீர் நிலவரம் இதுதான்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 70 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 82 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க..
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
PRESS, Police, Doctor, EB என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போலீஸார் தடை விதித்துள்ளனர். மேலும், வாகனங்கள் இது போன்ற குறியீடுகள் இடம் பெற்றிருந்தால் மே 1க்குள் அகற்ற வேண்டும் என்றும், மே 2ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க..
அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் என்பது நகைச்சுவை: வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்க- ராமதாஸ்
’’தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது ஏற்கனவே நலிவடைந்த நிலையிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும். மேலும் படிக்க...