TN Headlines: பாஜகவுடன் கூட்டணி பற்றி இபிஎஸ் சொன்ன பதில் - இன்றைய முக்கியச் செய்திகள்!
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
செல்வப்பெருந்தகைக்கு அருகதை இல்லை, வாயை மூட வேண்டும்: காஞ்சியில் கொதித்த எச்.ராஜா
கொள்கை பிடிப்பு இல்லாத செல்வப் பெருந்தகை, பாஜக பற்றி பேச அருகதை இல்லை எனவும் பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும் என்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமென எச். ராஜா காஞ்சிபுரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பா.சிதம்பரத்திற்கு பொருளாதாரம்தான் தெரியாது என்றால், கணக்கு கூட தெரியவில்லை, பாஜக ஏற்கனவே 430 தொகுதியில் போட்டியிட்டு மீதி கூட்டணிக்கு வகுத்தது,அதில் 240 தொகுதி வெற்றி பெற்றது ஆனால் பா. சிதம்பரம் கணக்கு தெரியாமல் 99 வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். இதை அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் குற்றமா என கேள்வி கேட்கவேண்டிய நிலை உருவாகிறது, வயது மூப்பு காரணமாக இதுபோன்று பேசி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களில் ஜமாபந்தி எப்போது தெரியுமா? - பட்டியல் இதோ.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 1433-ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) 19.06.2024 முதல் 28.06.2024 வரை (இடையில் வரும் சனி, ஞாயிறு நீங்கலாக) கீழ்குறிப்பிட்டுள்ள அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை - விண்ணப்பிக்க வரும் 20ஆம் தேதியே கடைசி
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் நான் உயிருடன் உள்ளேன் என கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 529 கன அடியில் இருந்து 853 கன அடியாக அதிகரிப்பு.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 239 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 529 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 853 கன அடியாக அதிகரித்துள்ளது.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? - இபிஎஸ் சொன்ன பதில் என்ன?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒப்புதல் வாக்குகளை பெற்றிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்களித்த வேட்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீதிக்கு வந்து போராடிய மக்கள்.... தனி ஒரு ஆளாய் பிரச்னையை பேசி சரி செய்து அசத்திய எஸ்.ஐ.
காவல்துறை உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவரும் சளி, காய்ச்சலோடு, கையில் துண்டோடு, மக்களின் குறைகளை கேட்டு அறிந்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், மழைநீர் செல்லும் பத்தடி தூரத்தில் மாநகராட்சி நிர்வாகம் எல்லை ஆரம்பிக்கும் நிலையில், நகராட்சியாக இருந்த கரூர் மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், பாதிப்பிற்கு உட்பட்ட பகுதியும் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட நிலையிலும் மாநகராட்சி நிர்வாகமும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.