TN Headlines: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு! 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் முதல்வர் அறிவிப்பு - இதுவரை இன்று
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
திமுக எம்.பி. கதிர் ஆனந்த், வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி ஸ்டாலின், வருங்காலம் எங்கள் உதயநிதி என்று முழக்கமிட்டார்.
நாட்டின் 18ஆவது மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் அத்தனை பேரும் தமிழில் உறுதிமொழி எடுத்தனர். மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், பதவியேற்கும்போதே நீட் தேர்வு வேண்டாம் எனவும் முழக்கமிட்டார். அதே நேரத்தில், திமுக எம்.பி. கதிர் ஆனந்த், வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி ஸ்டாலின், வருங்காலம் எங்கள் உதயநிதி என்று முழக்கமிட்டார்.
அதேபோல சி.என்.அண்ணாதுரை, தரணிவேந்தன் உள்ளிட்ட எம்.பி.க்களும் உதயநிதியை வருங்காலம் என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து பதவியேற்ற பெரும்பாலான அமைச்சர் உதயநிதி, எ.வ.வேலு ஆகியோரைக் குறிப்பிட்டு உறுதிமொழி எடுத்தனர்
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
Chennai HC Judge On Caste: குறுக்கு வழியில் தீர்ப்புகளை பெற முயற்சிப்பவர்களுக்கு எதிராக போரை தொடங்கியுள்ளேன் என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசமாக பேசியுள்ளார்.
ஜாதி, மத அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கமாட்டேன். ஜாதி , மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்பதை பார்த்து உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டேன். குறுக்கு வழியில் தீர்ப்புகளை பெற முயற்சிக்கும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு எதிராக போரை தொடங்கியுள்ளேன்” என நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசமாக பேசியுள்ளார். சில நீதிபதிகள் என்ன மாதிரியான உத்தரவுகளையும் பிறப்பிப்பார்கள். அதன்பின் அத்தகைய நீதிபதிகளுக்கு ஆதரவாக தீர்மானங்களை சில வழக்கறிஞர்கள் நிறைவேற்றுகிறார்கள். குறிப்பிட்ட நிதி முறைகேடு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் யார்? அந்த நீதிபதி யார்?" என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வியை எழுப்பியுள்ளார்.
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் நிரப்பப்படும். இவை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும். 17,591 இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’நமது அரசு அமைதியான, வலிமையாக அரசாகத் திகழ்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் நிரப்பப்படும். இவை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும். அதேபோல 17,591 இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். காலியாக இருக்கும் பிற பணியிடங்களையும் சேர்த்து, மொத்தம் 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இவ்வாறு நிரப்பப்படும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை 110 விதிகளின்கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
EPS meets Governor: கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முறையிட்டுள்ளார்
TNCMTSE 2024: ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
TNCMTSE Exam 2024: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வின் மூலம் 1000 மாணவர்கள் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் (500 மாணவர்கள், 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்படுவர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி. இதில் திமுகவுக்கும், நாம் தமிழருக்கும் தான் போட்டி.
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கும், நாம் தமிழருக்கும் தான் போட்டி, திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி என விக்கிரவாண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ - மளிகை கடையில் சிக்கிய சாராயம்
புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் 58 பேர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளி எதிரே மளிகை கடை மற்றும் வீடுகளில் கள்ளச்சாராயம் பாக்கெட் மற்றும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த நபர்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கையும் களவுமாக பிடித்து காவல்துறையுடம் ஒப்படைத்தார்.