மேலும் அறிய

TN Headlines: மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து- உதயநிதி; கொலைக்களமாக தமிழ்நாடு - இபிஎஸ்: இதுவரை இன்று

Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்து சேவை: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

”பேருந்தினுள் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி அதனுடனே அமரும் வண்ணம் தனி இடவசதியும் இந்த பேருந்துக்களில் அமைக்கப்பட்டுள்ளது”

சென்னையில் தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 88 புதிய பேருந்துகள், 12 பழைய புதுப்பிக்கப்பட்ட பேருந்து என மொத்தம் 100 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டுள்ளன.  சென்னையில் முக்கிய வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேருந்துகள் மாற்றுத்திறனாளி பயணியர் சக்கர நாற்காலியுடன் பேருந்தில் ஏறி பயணம் செய்யும் வகையில் இந்த பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

IPS Transfer: தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - மேற்குமண்டல ஐ.ஜி., ஆக செந்தில்குமார் நியமனம்

IPS Transfer: நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. IPS Transfer: தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மேற்குமண்டல ஐ.ஜி. ஆக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

EPS On Tn Govt: திமுக ஆட்சியில் கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

EPS On Tn Govt: திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த  திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகராட்சி புதிய மேயர் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்கள்..! ”

மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் மேயர் தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட உள்ளார்”

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி எம் சரவணன் கடந்த ஜூலை மூன்றாம் தேதி தனதுபதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மேயர் பதவி இடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நெல்லை மாநகராட்சியின் மேயர் தேர்தலை நடத்துவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன் பின்னர் நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக நாளைய தினம் (5.08.24) காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "எனது விவாகரத்து விவகாரத்தில் யாரையும் இழுக்க வேண்டாம்" -நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள்
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
Rishabh Pant:  ரிஷப்பண்ட் மிரட்டல் கம்பேக்! விபத்திற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்டிலே சதம்!
Rishabh Pant: ரிஷப்பண்ட் மிரட்டல் கம்பேக்! விபத்திற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்டிலே சதம்!
Embed widget