TN Headlines: தாம்பரத்தில் ரெடிமேட் சுரங்கப்பாதை; மேட்டூரிலிருந்து1 லட்சம் கன அடி நீர்: இதுவரை இன்று
Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
மேட்டூர் அணை நீர்மட்டம்:
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 88,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் முதல் முறை ரெடிமேட் சுரங்கப்பாதை...
40 ஆண்டுக்குப் பிறகு தீர்வு... தமிழ்நாட்டில் முதல் முறை ரெடிமேட் சுரங்கப்பாதை... தரமாய் தயாராகும் ஜிஎஸ்டி சாலை..! Irumbuliyur tunnel: தமிழ்நாட்டிலே முதல்முறையாக தாம்பரம் இரும்புலியூரில் ரெடிமேட் சுரங்கப்பாதை அமைகிறது.
செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது
செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன? நில மோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் இல்லத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.
நிலச்சரிவு பாதிப்பு; வயநாட்டிற்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்பிய தர்மபுரி ஆட்சியர்
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் மண் சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் 3 கிராமங்கள் வீடுகளே இல்லாமல் மண்ணில் பதிந்துள ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய கேரளா அரசு வங்கி கணக்கு எண்களை வழங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மக்களுக்கு பண உதவிகளும் உணவு மருந்து போன்ற பதிவுகளையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் கேரள மாநிலம் வயநாடு மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 7 லட்சம் ரூபாய்க்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் வழங்கியுள்ளனர்.
'அப்பா சொத்தில் இருந்து ஒரு காசு கூட எடுக்காமல் பல்துறைகளில் பணியாற்றி கோடீஸ்வரன் ஆனேன்' - அமைச்சர் பி.டி.ஆர் நெகிழ்ச்சி
கல்வியை யாராலும் பறிக்க முடியாது, கல்வி அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும் - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
கல்வி பயின்றதால் அப்பா சொத்தில் இருந்து ஒரு காசு கூட எடுக்காமல் பல்துறைகளில் பணியாற்றி கோடீஸ்வரன் ஆனேன், வெளிநாடுகளில் கல்வி பயின்றாலும் இந்தியாவுக்கு திரும்பி மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன் என மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு