மேலும் அறிய
Tamilnadu Roundup: இன்று தொடங்கும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் விண்ணப்பம்! இன்று வேப்புமனு தாக்கல் செய்கிறார் கமல்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு
Source : twitter
- சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி பல்வேறு பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
- உளுந்தூர்பேட்டையில் உள்ள பழமையான ஸ்ரீ கெங்கை அம்மன் கோயில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, இன்று விற்பனை களைகட்டியுள்ளது சுமார் ரூ.2.50 கோடி அளவுக்கு இன்று விற்பனை நடைபெறும் என எதிர்பார்ப்பு
- சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து - 10 பேர் படுகாயம்
- டிஎன்பிஸ்சி சார்பில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப்-1, 1ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இன்று (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- மதுரை திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகள் வாங்க மக்கள் ஆர்வம் - ரூ. 8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூன் 6) கடைசி நாள்
- "2026 தேர்தல் கூட்டணி குறித்து எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை’ தவெக தரப்பு தகவல்
- JEE தேர்வில் வெற்றிபெற்று ஐஐடியில் படிக்கவிருக்கும் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று (ஜூன் 6) நண்பகல் 12 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















