மேலும் அறிய
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்... 2 மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : twitter
- சேலம்: ஏற்காட்டில் சாலைத் தடுப்புகளை உடைத்து விளையாடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
- தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச்சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல்
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் நாளை (ஜூன் 04) 2ஆம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா
- சிவகங்கையில் ஆடு, கோழி திருட வந்ததாக இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கிராம மக்கள் 10 பேர் கைது
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,640க்கு விற்பனை.
- பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் - தனியார் மருத்துவமனைக்கு சீல்.
- தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம்!
- தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் நடத்திய ஆபரேஷன் ஹைத்ரா - 7 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது!
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குருவன் கோட்டையில், விநாயகர் சிலை உடைப்பு. நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு. ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
- சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரம் சாலையின் குறுக்கே சிக்கிக் கொண்டதால் பரபரப்பு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























