மேலும் அறிய
Tamilnadu Roundup: கரூர் வழக்கு இன்று விசாரணை, தங்கம் விலை கணிசமாக குறைவு, இருமல் மருந்துக்கு தமிழகத்தில் தடை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- ராமநாதபுரத்தில் உள்ள புல்லாங்கடி பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில், ரூ.738 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- கரூர் விஜய் பிரசார கூட்டநெரிசல் மரணம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் மீதும் இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை.
- பாஜக-விஜய் இடையே மறைமுக உடன்பாடு உள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொடுப்பதை விஜய் பேசுவதாகவும் திருமாவளவன் விமர்சனம்.
- கரூர் கூட்ட நெரிசல் குறித்து விஜய் இதயத்தில் வலி இல்லை என சீமான் விமர்சனம். முதலமைச்சரை சிஎம் சார் என விஜய் அழைப்பதும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாகவும் கருத்து.
- சென்னையில் உள்ள முதலமைச்சர் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீடுகளுக்கும், பாஜக தலைமை அலுவலகத்திற்கம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவருக்கு காவல்துறை வலை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.10,840-க்கும், ஒரு சவரன் ரூ.86,720-க்கம் விற்பனை செய்யப்படுகிறது.
- தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு. தமிழக பகுதிகளுக்கு 54, பிற மாநிலங்களுக்கு 54 ரயில்கள் இயக்கப்படும் என விளக்கம்.
- மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை. காஞ்சிபுரத்தில் உள்ள அதன் ஆலையிலிருந்து விநியோகிக்கவும் தடை விதிப்பு.
- சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றம். மீட்டக்கப்பட்ட நிலத்தில் வேலி மைத்து, பாசன வசதியுடன் 15,000 மரக்கன்றுகள்நட்டு பராமரிக்க நடவடிக்கை.
- சென்னை சுங்கத்துறையினர் லஞ்சம் கேட்டு தொல்லை தருவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வின்ட்ராக் என்ற நிறுவனம் குற்றச்சாட்டு. ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு.
- கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் யானை தானாகவே திரும்பிச் சென்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















