Tamilnadu Headlines: திரும்பும் பக்கமெல்லாம் மழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

டிட்வா புயல் காரணமாக சென்னையில் தொடரும் மழை; வேலைக்குச் செல்பவர்கள் கடும் அவதி - சாலையில் தேங்கிய மழைநீர்
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை எண்ணூரில் 13 செ.மீட்டர் மழை கொட்டியது
சென்னையில் தொடர்ந்து பெய்யும் மழையால் ஆவடி, பட்டாளம், புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
தொடர் கனமழை; சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை மூழ்கியது
சென்னை ஓஎம்ஆர் சாலை மழையால் சேதம் அடைந்து காட்சி - வாகன ஓட்டிகள் அவதி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மழையால் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூரில் 4 மணி நேரத்தில் 11 செ.மீட்டர் மழை பதிவு
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியது
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக சென்னையில் மட்டும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு





















