மேலும் அறிய
Tamilnadu Roundup: அட்சய திருதியில் தங்க விலை என்ன? 200 தொகுதிகளை வெல்வோம்! 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP Live
- பாஜக-தவெக கூட்டணிப் பேச்சு குறித்து எனக்குத் தெரியாது - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
- அண்ணா நூற்றாண்டு நூலக குழந்தைகள் பிரிவில் மே 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் கோடைக்கால திருவிழா
- கொல்கத்தா நட்சத்திர விடுதி தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு
- சங்கர மடத்தின் 71ஆவது மடாதிபதியாக நியமிக்கப்பட்ட சுப்பிரமணிய கணேச சர்மாவுக்கு சன்னியாச ஆசிரம தீட்சை
- புதிய மடாதிபதி கணேச சர்மாவுக்கு மாடதிபதி விஜயேந்திரர் தீட்சையை வழங்கினார்; ஸ்ரீ சத்திய சந்திரசேகந்திர சரஸ்வதி சாமிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மோதல்
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டியாபுரம் கிராமத்தில் பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து
- தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது; ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? - எல்.முருகன்
- தமிழ்நாடு முழுவதும் மூத்த சிவில் நீதிபதிகள் 117 பேர் இடமாற்றம்
- "நேரில் விரைவில் சந்திப்போம்" பத்பூஷன் விருதுடன் சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார் பேட்டி
- "200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறுவோம்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 100 ஆண்டுகால பிரச்னையை தீர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இதனால் அனைத்து மாநிலங்களும் பயன் பெறவுள்ளன” -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- அட்சய திருதியை முன்னிட்டு கோவையில் காலை 5 மணி முதலே நகைக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















