மேலும் அறிய
Tamilnadu Roundup: புதிய உச்சத்தில் தங்க விலை.. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு! தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு
Source : ABP Live
- தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது!
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 1 சவரன் ரூ. 60,760-க்கு விற்கப்படுகிறது.
- தஞ்சாவூர் அருகே கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது
- அகழாய்வில் இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம்
- 100ஆவது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது இஸ்ரோ
- காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தது இலங்கை கடற்படை.
- மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது
- குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான நிலம் மீட்பு.
- ஈரோட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
- காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 2 படகுகளை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றச்சாட்டு.
- ராணிப்பேட்டைப் அருகே இளைஞர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
- நாளை (ஜன.30) மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து தொடர்பாக நடைபெறும் பாராட்டு விழாவில் மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்கிறார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















