மேலும் அறிய
Tamilnadu Roundup: தீவிரப் புயலானது ‘மோன்தா‘, ஈரோடு கூட்டுறவு வங்கியில் 250 சவரன் நகை கையாடல், தங்கம் விலை மேலும் குறைவு - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- மாமல்லபுரத்தில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி‘ எனும் பெயரில், திமுக நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
- அவசரகதியில் செய்யப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பாஜகவிற்கு சாதகமாக நடத்தப்படும் சதி என்றும், வாக்குத் திருட்டை முறியடிப்போம் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரை.
- வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா‘ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றதாகவும், இன்று இரவு தீவிர புயலாகவே மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
- ‘மோன்தா‘ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு.
- ‘மோன்தா‘ புயல் எதிரொலியாக, சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 3 விமானங்கள் ரத்து. இதேபோல், ஆந்திராவில் இருந்து சென்னை வரும் 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- சென்னையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
- சென்னை புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால், 250 கனஅடி உபரி நீர் திறக்கப்படும் நிலையில், கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ, விம்கோ நகரில் 8 செ.மீ, மணலி, மாதவரம், பெரும்பூரில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து, கிராம் ரூ.11,300-க்கு விற்பனை. வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை.
- ஈரோட்டில், கூட்டுறவு நகர வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்த 250 சவரன் நகை கையாடல். வங்கி மேலாளர், நகை மதிப்பீட்டாளர் கைது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















