Tamilnadu Roundup: நாளை மறுநாள் கரையை கடக்கும் மோந்தா.. திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹாரம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், அடையாறு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை மீண்டும் ஆய்வு செய்த முதலமைச்சர்
மோந்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நாளை மறுநாள் கரையை கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னைக்கு 850 கி.மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் புயல் சின்னம்
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்; களைகட்டிய கொண்டாட்டம் - தொடர்ந்து குவியும் பக்தர்கள்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எஃப் ஐ ஆர் பதிவு செய்த சிபிஐ
கரூர் சம்பவம்; சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐ ஆரில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு; திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் குழு இன்று ஆய்வு
தமிழகத்தின் புதிய டிஜிபி-யைத் தேர்வு செய்வதற்கான இறுதிக்கட்டத்தை இன்னும் எட்டவில்லை - யுபிஎஸ்சி
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு விரைவில் நோட்டீஸ் - மாநகராட்சி முடிவு
வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமாக நாகை - இலங்கை இடையேயான கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நாம் தமிழர் கட்சி சார்பில் நவம்பர் 15ம் தேதி தமிழ்நாட்டில் தண்ணீர் மாநாடு - சீமான் அறிவிப்பு
குற்றாலத்தில் 11 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
ராமநாதபுரம் இளைஞரை திருமணம் செய்த பிலிப்பைன்ஸ் பெண்





















