மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: 28 ரயில்கள் ரத்து, மிக கனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் முக்கிய செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம் - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க திட்டம்
- தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
- சென்னையில் ஆபாரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, சவரன் 57,800 ரூ விற்பனை செய்யப்படுகிறது
- நடிகர் ரஜினி உடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் சந்திப்பு
- அடுத்த முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருந்த நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, கடவுள் அருள் எங்களுக்கு இருப்பது அன்றைக்கு தெரியவந்தது - அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
- மின்வாரிய ஒப்பந்தங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும் - பிரேமலதா
- தொடர் கனமழை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த 10 பேர் கைது’
- பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து
- திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் வரும் 10 அல்லது 11ம் தேதிகளில் விநியோகிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
- சென்னையில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி - தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் கைது
- நாகைய சேர்ந்த பால்ராஜ் கோடியக்கரை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு
- சிவகங்கையில் பள்ளி சிறுமியரை கோயிலை சுத்தம் செய்ய அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி போக்சோ வழக்கில் கைது’
- கள்ளகுறிச்சியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு
- திருவள்ளூரில் மீனவர் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளிவைத்த பஞ்சாயத்தார் மீது எப்.ஐ.ஆர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion