Tamilnadu Roundup: இன்று மகாளய அமாவாசை.. தமிழ்நாட்டில் தொடரும் மழை - 10 மணி வரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

பாஜக-வை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே இயக்கம் திமுகதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக-வின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதால் திமுக-வை குறிவைக்கின்றனர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
விஜய் சுற்றுப்பயணத்தின்போது தேவாலய சுற்றுச்சுவர் இடிப்பு - தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி - நாகை தேர்தல் பரப்புரையிலும் விஜய் மீண்டும் பேச்சு
தான் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் திட்டமிட்டு மின்தடை செய்கின்றனர் - விஜய் குற்றச்சாட்டு
நாகையில் மின்சாரத்தை நிறுத்த தவெக நிர்வாகிகள் மனு கொடுத்தது அம்பலம்
கோவையில் நடந்த இட்லி கடை ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் தனுஷை பார்க்க அலைமோதிய கூட்டம்
இன்று மகாளாய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி
பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை - விஜய்க்கு நயினார் நாகேந்திரன் பதில்
2017ம் ஆண்டு ராமேஸ்வரம் மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதை கூறி நயினார் நாகேந்திரனுக்கு மீனவர்கள் கண்டனம்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் பீமன் அருவியில் வெள்ளம்
திரைப்பட துறையில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெறுகிறார் மோகன்லால்





















