மேலும் அறிய
Tamilnadu roundup : மும்மொழிக்கொள்கை விவகாரம் - திமுக ஆர்பாட்டம், பொங்கி எழுந்த ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இது வரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாளை(பிப்.18) திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே.. இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் - மத்திய அரசுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை
- “மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டுக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்
- மத்திய அரசு வழங்கக்கூடிய திட்டம் வேண்டாம், நிதி மட்டும் வேண்டுமா? விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் நிதி மட்டும் கேட்பது எப்படி ? - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
- நிதி மானியம், நலத்திட்ட உதவிகள் பெறுவதில் நடக்கும் முறைகேட்டை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து விவசாய நிலங்களை பதிவு செய்யும் பணி தீவிரம்
- மயிலாடுதுறை: முட்டம் கிராமத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதான தங்க துரை, மூவேந்தன் ஆகியோரின் பெற்றோர்களும் கைது
- திருப்பத்தூரில் போலீஸ் வீட்டிலேயே நகை, பணம் கொள்ளை.. இரும்பு ராடல் கதவை உடைத்து கொள்ளையடித்த முகமூடி கும்பல்
- ஈரோடு: சென்னிமலை அருகே சில தினங்களுக்கு முன்பு 20 ஆடுகளை, நாய்கள் கடித்துக்கொன்ற நிலையில், நேற்றிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 15 ஆடுகளை கூட்டமாக வந்த நாய்கள் கடித்துக்கொன்றுள்ளன
- சென்னை அரும்பாக்கம் பகுதியில் கையில் ஆட்டோவில் அமர்ந்து பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இருவர், ரோந்து போலீசாரிடம் சிக்கினர்
- கும்பகோணம்: ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கணவரை, குளவிக்கல் கொண்டு அடித்துக்கொன்ற மனைவி கைது
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாழிமலைப் பகுதியில் வேகமாக பரவும் காட்டுத்தீ - பல வகையான மரங்கள் எரிந்து நாசம்
- நிலத் தகராறில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.என்.ரவியின் சகோதரரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement






















