இனி ஜிம் தேவையில்லை!! வீட்டிலிருந்தே Leg Workout பண்ணலாம்

Published by: ABP NADU
Image Source: Meta AI

ஜிம் போகாமல் வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்காக சில Leg Workout.

1. Squat

உடற்பயிற்சியின் தொடக்கத்தில் இருப்பவர்களால் ஆரம்பத்திலேயே இதை செய்ய இயலாது. அதனால் நாற்காலி அல்லது முக்காலியை பயன்படுத்திக்கொள்ளவும்.

2. Lunge

இந்த உடற்பயிற்சியை செய்வதால் இடுப்பு, முழங்கால் எலும்பு, பின்பகுதி, தொடை தசைகள் வலுவாகின்றன.

3. Single-Leg Calf Raises

கால்களின் பின்பகுதியை வலுப்படுத்தும் உடற்பயிற்சி. ஆரம்பத்தில் ஒற்றைக்காலில் நிற்க கடினமாக இருந்தால், சுவரை பற்றிக்கொள்ளலாம்.

4. Pistol Squats

இது கொஞ்சம் கடினமான உடற்பயிற்சி தான். நீங்கள் Squat சரியாக செய்தால் இந்த உடற்பயிற்சி அவ்வளவு கடினமாக இருக்காது.

5. Leg Raises

இந்த உடற்பயிற்சி செய்வதால் உங்கள் கால், தொடை, இடை ஆகியவை வலுவாகவும், வடிவான தோற்றத்துடனும் இருக்கும்.

6. Wall Sits

வீட்டில் செய்யக்கூடிய எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சிகளில் ஒன்று. சுவரில் சாய்ந்து நாற்காலியில் உட்காரும் நிலையில் நிற்கவேண்டும்.

7. Walk

நடப்பது ஒரு சாதாரன விஷயம் தான். ஆனால் அது காலுக்கு எவ்வளவு நல்லது என்று நமக்கு தெரிவதில்லை. நடப்பதால் கலோரிகள் குறைந்து ஆரோக்கியம் மேம்படுகிறது.