மேலும் அறிய
Tamilnadu Roundup: 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், மீண்டும் உயர்ந்த தங்கம் விலை, நீலகிரிக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்கிறார்.
- பாஜக உடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்பது தேர்தல் நேரத்து வெற்றிக்காக மட்டுமே என்றும் விளக்கம்.
- தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல். உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.11,425-க்கும் விற்பனை.
- இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, இன்று முதல் அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
- நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம். திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தகவல்.
- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 6,517 கனஅடியாக அதிகரித்ததால், 4,249 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், தென்பெண்னை ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு.
- மதுரையிலிருந்து சென்னைக்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், சாதுர்யமாக செயல்பட்ட விமானி பத்திரமாக விமானத்தை தரையிறங்கினார்.
- திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரத்தை ஒட்டி, வரும் 27-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது எனவும் ஆட்சியர் விளக்கம்.
- பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில், 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகளை கொன்ற தந்தை போலீசில் சரண். மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த ஆத்திரத்தில் வெறிச்செயல்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















