மேலும் அறிய
Tamilnadu Roundup: காவல்துறையுடன் மல்லுக்கட்டும் தவெக, சென்னையில் ED சோதனை, 12 மாவட்டங்களில் கனமழை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup(10.09.25): தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- விஜய்யின் சுற்றுப்பயணத்திற்காக காவல்துறையினர் விதித்த நிபந்தனைகளை ஏற்க தவெக மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை என தகவல்.
- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் குவிந்துவரும் ஆதரவாளர்கள். டெல்லி சென்று வந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- செங்கோட்டையனைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு. வரும் நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் TET தேர்வு நடைபெற உள்ளது.
- இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கை குறித்து நாளை மாலை 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை. அனைத்து சங்கங்களும் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
- தமிழ்நாடு அரசு ஒரு கலைஞருக்கு பாராட்டு விழா நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பேட்டி.
- சென்னையில், அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலம் பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை. வேளச்சேரியில் தெழிலதிபர் ஒருவரது வீட்டிலும், அடையாறில் மருத்துவர்இந்திரா என்பவர் வீட்டிலும் சோதனை.
- திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணிக்காக நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை. எச்சரிக்கை பலகை வைக்காததால் விழுந்ததாக தகவல்.
- கனமழை காரணமாக கொடைக்கானலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. 6 - 12 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால், விடுமுறை குறித்து பள்ளி தலைமையாசிரியர் முடிவு செய்யலாம்.
- உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.
- தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















