மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: உத்தராகண்டில் சிக்கிய 30 தமிழர்கள் - மீன் சந்தைகளில் குவிந்த கூட்டம் - மாநிலத்தில் இதுவரை இன்று..!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
- பேரிடர் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் அடுத்தடுத்து குவியும் புகார்கள் - நேற்றைய சிறப்பு முகாமில் 315 பேர் உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தனர்
- ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பான வீடியோ - தனக்கு தெரியாது, அட்மின் பகிர்ந்திருக்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
- உத்தராகண்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழர்கள் 30 பேர் நிலச்சரிவில் சிக்கி தவிப்பு - பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
- நாளை மறுநாள் முதல் புரட்டாசி மாதம் தொடங்க உள்ளதால், பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளில் குவிந்த மக்கள் - தேவை அதிகரித்துள்ளதால் பல மீன்களின் விலையும் அதிகரிப்பு
- சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் தயார் 7 அடி உயரம் வரை உள்ள சிலைகள் மற்றும் 7 அடி உயரத்திற்கு மேல் உள்ள சிலைகளை கரைக்க 2 பகுதிகளாக பிரிப்பு உயர் கோபுர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைப்பு. சுமார் 200 போலீசார்
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை - ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு
- தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 7 மணி வரை முழுவதுமாக ரத்து
- தீபாவளிக்கு கங்கையில் நீராட விரும்புபவர்களுக்காக, ராமநாதபுரத்தில் இருந்து ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு
- தேவக்கோட்டை அருகே சுற்றுலா வேன்-கார் பயங்கர மோதல் தந்தை, மகள்கள் உட்பட 4 பேர் பலி: மலேசிய தமிழர்கள் 8 பேர், டிரைவர் படுகாயம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion