Tamilnadu Roundup: 15,516 கோடி முதலீடுகள்.. இபிஎஸ் வாகனத்தை மறித்த தொண்டர்கள் - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தில் இதுவரை 15 ஆயிரத்து 516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலமாக 17 ஆயிரத்து 613 வேலைகள் உருவாகியுள்ளது
தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
தேனி மாவட்டத்தில் சங்கராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இபிஎஸ் வாகனத்தை மறித்த அதிமுக தொண்டர்கள்
தமிழ்நாட்டின் அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை
கோயம்பேடு மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்பநாய் உதவியுடன் சோதனை
கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பு - கிலோ ரூபாய் 15க்கு விற்பனை
திருநெல்வேலி டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞர் வெட்டிக் கொலை - மர்மகும்பல் தப்பியோட்டம்
நாட்டில் இதய நோய்களால் 31 சதவீதம் பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசவத்திற்கு பின் குழந்தையை பரிதவிக்க விட்டுச் சென்ற தாய்
கொடைக்கானலில் கூகுள் மேப்பை பயன்படுத்திச் சென்ற லாரி குடியிருப்புக்குள் புகுந்த பரிதாபம்
தமிழ்நாட்டில் இன்று நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் - 2.6 லட்சம் பேர் இதுவரை பயன்
கர்நாடக அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு - ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு





















