தமிழ்நாட்டுக்கு லீடர் விருது...! முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் யார்?
தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்கிய லீடர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காட்டி அமைச்சர் தா.மோ. அன்பரசன் வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத்துறை சார்பில் கடந்த 4-ந் தேதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுப்பதில் சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு கைப்பற்றியது. இந்த விருதை கைப்பற்றிய தமிழ்நாடு லீடர் விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் புத்தொழில் சூழமைவில் வளர்ந்து வரும் மாநிலம் என்ற விருதைப் பெற்று வந்த தமிழ்நாடு, நடப்பாண்டில் லீடர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த விருதை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட லீடர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் காட்டி வாழ்த்து பெற்றார்.
மேலும் படிக்க : Chess Olympiad 2022 : வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்...! தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் தா.மோ. அன்பரசன் சந்தித்தார். அப்போது, அவர் மத்திய அரசு வழங்கிய லீடர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காட்டினார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினர். இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஒவ்வொரு துறையிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்பயனாக, தற்போது தமிழ்நாடு அரசுக்கு லீடர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட லீடர் விருதுக்கு பல்வேறு கட்சியினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : 44th Chess Olympiad: சென்னை வரும் பிரதமர் மோடி.. இத்தனை போலீசார்.. இதற்கெல்லாம் தடை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்