மேலும் அறிய

Mandous cyclone: புயலில் இருந்து தப்பிக்கணுமா..? பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகள் இதுதான்...!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

சென்னைக்கு 270 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்னும் 3 மணிநேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்க உள்ள மாண்டஸ் புயலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:

  • பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்கக்கூடாது.
  • நீர் நிலைகளின் அருகில், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் செல்பி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • மாண்டஸ் புயல்கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். 
  • இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், டிவிட்டர்), TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
  • மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்,

மேற்கண்ட அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

 காவலர்களுக்கு அறிவுறுத்தல்:

  • கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும்.
  • முன்னெச்சரிக்கை செய்திகள் TNSMART செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.  
  • பேரிடரின்போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
  • பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.
  • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து பல்துறை மண்டலக் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
  • பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
  • மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.
  • மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.

அதிகாரிகளுக்கான உத்தரவு:

  • தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.
  • பால் மற்றும் பால்பவுடர் விநியோகம் தடையில்லாமல் நடைபெற உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.
  • பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • நெடுஞ்சாலை, நீர்வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.