Power Shortage: திடீரென தடைப்பட்ட மின்சாரம்.. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையை விளக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி !
திடீரென ஏற்பட்ட மின்சார பற்றாக்குறையை சரி செய்தது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.
மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வரும் மின்சாரம் திடீரென இன்று இரவு தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சூழலில் இந்தப் பற்றாகுறையை போக்க தமிழ்நாடு அரசு செய்த நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 20, 2022
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க
நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் (1/2)
இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 20, 2022
இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.(2/2)
இவ்வாறு தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தமிழிலும் குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு: எதிர்ப்பால் நிலைப்பாட்டை மாற்றிய டிஎன்பிஎஸ்சி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்