TN Corona Update | தமிழ்நாட்டில் இன்று 715 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தொற்றால் 12 பேர் உயிரிழப்பு..!
கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,504 ஆக அதிகரித்துள்ளது.
![TN Corona Update | தமிழ்நாட்டில் இன்று 715 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தொற்றால் 12 பேர் உயிரிழப்பு..! Tamilnadu coronavirus Daily updates 2021 Dec 2nd 715 new cases and 748 recovery and 12 deaths TN Corona Update | தமிழ்நாட்டில் இன்று 715 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தொற்றால் 12 பேர் உயிரிழப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/01/4ac1e23df8228d7a04e392cc4402d1cf_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,28,350 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 748 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,83,691 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.3% குணமடைந்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,513 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,155 ஆக குறைந்துள்ளது. இதில், தோராயமாக, 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், ஈரோடுஆகிய மூன்று மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 555 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 1420 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 24% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பின் தீவிரத்தன்மை என்ன? தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக குறைந்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 0.7 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 1 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,01,569 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 (5,34,39,828) கோடியாக அதிகரித்துள்ளது.
ஒமிக்ரான் தொற்று: பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமிக்ரான் கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா நாட்டில் கடந்த 4 வாரங்களில் மரபணு செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளில் 72% ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய இந்த ஓமைக்ரான் தொற்று, ஆர்டிபிசிஆர் மற்றும் ராபிட் ஆண்டிஜென் பரிசோதனைகளிலிருந்து தப்பிவிடாது என்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பதோடு, பாதிப்பு அறிகுறி உடையவர்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கமாறு மத்தியி அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் இரண்டு பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளை அபாய பிரிவு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளிடம் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், பயணத் தடைகள் தேவையற்றது எனவும், இதன்மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தடைபடும் என்றும் உலக சுகாதார அமைப்பு அமைப்பு முன்னதாக தெரிவித்தது. பயணத்தடைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)