IPS Transferred: சேலம் கமிஷனராக விஜயகுமாரி நியமனம்..! 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆவடி கூடுதல் காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி ஐ.பி.எஸ்., சேலத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தின் ஆணையராக இருந்த நஜ்முல் ஹோடா, ஆவடி கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயகுமார் ஐபிஎஸ், ஆவடியின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் ஐஜி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சேலம் மாநகரத்துக்கு சேலத்தின் ஆணையராக இருந்த நஜ்முல் ஹோடா, ஆவடி கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி கூடுதல் காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி ஐ.பி.எஸ்., சேலத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.




















